சுடச்சுட

    

    நல வாரியங்களின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DN  |   Published on : 22nd April 2015 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நலத்துறை, நல வாரியங்களின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்த வலியுறுத்தி, திருவாரூரில் ஏஐடியுசி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலையோர சிறு வர்த்தக தொழிலாளர்களுக்கான 2014-ம் ஆண்டு மத்திய

    சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்கி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஏஐடியுசி மாவட்டத் தலைவர் அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் சந்திரசேகர ஆசாத், பொருளாளர் புண்ணீஸ்வரன், கட்டட சங்க

    மாவட்டச் செயலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai