Enable Javscript for better performance
பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளிக்கும் மைய அரசுகள்: த. வெள்ளையன் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளிக்கும் மைய அரசுகள்: த. வெள்ளையன் குற்றச்சாட்டு

  By DN  |   Published on : 22nd April 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதேசி பேசி மத்தியில் ஆட்சிக்கு வந்தப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன என்றார் தமிழ்நாடு வணிகர் நலச் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

  தஞ்சையில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள வணிகர் தின விழா, மாநில மாநாடு கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்

  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது: வணிகர்கள் தங்கள் பகுதியின் வளர்ச்சிக்கான சமூக ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய

  அளவிலான சமூகப் பணியை பாராட்டுவதன் மூலம் ஊக்கம் பெற்று பெரிய அளவிலான சமூகப் பணிகள் செய்ய அது உந்துசக்தியாக இருக்கும்.

  ஆண்டுக்காண்டு வரிக்கு மேல் வரி போட்டு வருவதால், வியாபாரிகள் அந்த வரியை விலையின் மீது வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால்,

  விற்பனை சந்தை தேக்கம் அடைகிறது. அரசு அறிவிக்கும் சட்டங்களை அதிகாரிகள் முறையாக பின்பற்றாத காரணத்தால், அரசு கருவூலத்துக்கு வரவேண்டிய தொகை

  அதிகாரிகளிடம் சென்றடைகிறது.

  ஆன்லைன் வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு சட்டம், அன்னிய முதலீடு, வால்மார்ட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்பு என பல்வேறு பிரச்னைகளுக்காக பல கட்டப்

  போராட்டங்களை நடத்தியும், மத்தியில் ஆளும் அரசு செவிசாய்ப்பதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது, வணிகர்களுடன் இணைந்து களத்தில் நிற்கும் கட்சிகள்

  மத்தியில் ஆட்சிக்கு வந்தப் பிறகு நேர் எதிர் நிலை எடுக்கின்றனர். இதில் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றார் அவர். கூட்டத்துக்கு

  மன்னார்குடி சங்கக் கிளைத் தலைவர் டி.என். பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் நூர்முகமது, மாநில துணைப் பொதுச் செயலர் ரா. முருகையன்,

  கௌரவத் தலைவர் வி. ராஜகோபால், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் க. அசோகன், தேமுதிக மாவட்ட மாணவரணி செயலர் ப.

  ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகி ஏ. ஜெகநாதபிள்ளை, மருத்துவர் சி. அசோக்குமார், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிறுவனர் க.கா.ரா. லெனின், நல்லாசிரியர்

  விருது பெற்ற எம். மீரா, நாடகக் கலைஞர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai