Enable Javscript for better performance
மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி 5 பெண்கள் மயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 5 பெண்கள் மயக்கமடைந்தனர்.

    பருத்திக்கோட்டை ஊராட்சி அமரபாகம் வெட்டிகாட்டில் உள்ள ஒரு வயலில் களை எடுக்கும் பணியில் பெண்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென

    கருமேகங்கள் சூழ்ந்து இடியும், மின்னலும் ஏற்பட்டது. இதில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் வெட்டிக்காடு கா. மஞ்சுளா (50),

    வெ. சுகந்தி (40), வே. அம்மாளு (40), சா. விஜயராணி (51), ச. சுமதி (27) ஆகிய 5 பேரும் மயங்கி விழுந்தனர்.

    அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 5 பேரும் கண் எரிச்சல், மயக்கம் இருப்பதாக தெரிவித்ததை

    அடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மன்னார்குடி ஊரக காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai