சுடச்சுட

    

    உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு தமிழக அரசு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருவதை பயன்படுத்திக்கொண்டு மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

    திருவாரூர் மாவட்ட மீன்வளத் துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து மன்னார்குடியில் மீன் வளர்ப்போர் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும்

    கண்காட்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

    இதைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:

    மீன் வளர்ப்போர் நலச்சங்கம் மீட்டெடுக்கப்பட்டு முதலில் 60 பேருடன் தொடங்கப்பட்டது. இதில், தற்போது அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைந்து வருவது

    மகிழ்ச்சி அளிக்கிறது. மேற்குவங்கம் உள்பட வட மாநிலங்களில் ஜலபூஷ்பம் என அழைக்கப்படும் மீன் சைவ உணவாக மாறி வருகிறது. வடமாநிலங்களில் ஒருவரின்

    செல்வாக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் அமைத்திருக்கும் பண்ணை குளங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், மாப்பிள்ளை வீட்டாரிடம் எத்தனை மீன்

    வளர்ப்பு பண்ணை குட்டைகள் உள்ளன என்பதைதான் பெண் வீட்டார் திருமணத்துக்கான முதல் தகுதியாக பார்க்கின்றனர்.

    விவசாயப் பணியுடன் மீன், ஆடு, கால்நடை வளர்ப்புகளிலும் விவசாயிகள் ஆர்வம் செலுத்த வேண்டும். உடல் நலனுக்கு கேடு ஏதும் விளைவிக்காத உணவு மீன் என்பதை

    மக்களுக்கு உணர்த்த வேண்டும். மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவதுடன் உற்பத்தி அதிகரிப்பதற்கான உத்தியை கையாள வேண்டும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், வலை மானியமாக தலா ரூ. 5 ஆயிரம் என 4 பேருக்கும், மீன் பண்ணைக் குட்டை எந்திரம் தலா ரூ. 60 ஆயிரம் என 4 பேருக்கும் மாவட்ட ஆட்சியர்

    வழங்கினார். விழாவில், மீன்வளத் துறை இணை இயக்குநர் எம். சுப்புராஜ், உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, வேளாண்மை இணை இயக்குநர் க. மயிவாகணன், மன்னார்குடி

    கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, கடல் உணவுப்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு இயக்க துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட நபார்ட்டு வங்கி மேலாளர் ரவிசங்கர்

    ஆகியோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai