Enable Javscript for better performance
மே 1-ல் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    மே 1-ல் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் குடமுழுக்கு

    By DN  |   Published on : 22nd April 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை (அஞ்சுவட்டத்தம்மன்) உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் குடமுழுக்கு மே 1-ல் நடைபெறவுள்ளது.

    இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவெடுக்கப்பட்டு 2012, நவம்பர் 11-ம் தேதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, சுந்தரகுஜாம்பிகை

    உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்து அம்மன், குபேரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சன்னதிகள், ராஜ கோபுரங்கள், மதில் சுவர்கள் ஆகிய அனைத்து

    திருப்பணிகள் முடிவடைந்து, மே 1-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    குடமுழுக்கு பணிகளை கோயில் செயல் அலுவலர் சு. ராஜராஜேஸ்வரன், தக்கார் ப. ராணி, சிவ கைங்கர்ய அறக்கட்டளை திருப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். குமார்,

    எஸ். கந்தசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai