சுடச்சுட

    

    காதல் திருமணம் செய்த பெண்ணை கத்தியால் குத்திய உறவினர்

    By திருவாரூர்,  |   Published on : 23rd April 2015 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் மற்றும் அவரது தாய் இருவரையும் கத்தியால் குத்திய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவாரூர் அருகேயுள்ள மேலராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கனகா (23). அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    சிலம்பரசனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கனகாவின் உறவினர் ரத்தினம் என்பவருக்கு கனகா காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லையாம். இதனால் சிலம்பரசன், கனகாவிடம் ரத்தினம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். புதன்கிழமை காலை ரத்தினம் மீண்டும் சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிலம்பரசன் புகார் தெரிவிக்க வைப்பூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த கனகா, அவரது தாயார் ராஜேஸ்வரி (45) ஆகியோரை ரத்தினம் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார்.

    இதில் படுகாயமடைந்த கனகா, ராஜேஸ்வரி இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைப்பூர் போலீஸார் ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai