சுடச்சுட

  

  திருவாரூரில் மே 21-ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க் கூட்டம்

  By திருவாரூர்,  |   Published on : 24th April 2015 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 21-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மாவட்டத்தில் பணியாற்றிய மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் குறித்த குறைகள் இருப்பின் அது தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு கீழ்க்காணும் விவரங்களுடன் (இரு பிரதிகளில்) விண்ணப்பதாரர் பெயர், முகவரி தொலைபேசி எண்ணுடன் மே 5-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பாமல் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai