சுடச்சுட

    

    எட்டுக்குடி சுப்பிரமணியர் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா தொடக்கம்

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 25th April 2015 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணியர் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக, பால்காவடிகளுடனும், ஆயிரக்கணக்கான பால்குடங்களில் பால் கொண்டு வந்தும் நாள் முழுவதும் சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெறும்.

    நிகழாண்டில் மே 3-ம் தேதி சித்திரை பௌர்ணமி நாள் வருகிறது. இதையொட்டி, கோயிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடரும் விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும், சுவாமி வீதியுலாவும் நடைபெறவுள்ளன. மே 2-ம் தேதி ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மே 3-ம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 24 மணி நேரமும் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெறும். விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் திருவாரூர் கோட்ட மேலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரெத்தினவேலு, செயல் அலுவலர் பி. லெட்சுமணன், மேலாளர் முத்துகிருஷ்ணன், கணக்கர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai