Enable Javscript for better performance
திருவாரூர் அருகே முதியவர் அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சனிக்கிழமை முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    நன்னிலம் அருகேயுள்ள நெம்மேலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராதா (60). இவரது மனைவி மணியம்மை (55). இவர்களது வீட்டுக்கு அருகில் மழை நீர் தேங்கியிருந்ததாம்.

    மழை நீரை அகற்றுவது தொடர்பாக மணியம்மைக்கும், பாலகிருஷ்ணனின் மருமகள் வசந்திக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இரண்டு வீட்டிலுள்ள ஆண்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாலகிருஷ்ணன், அவரது மகன் ராஜகுரு (30) ஆகியோர் ராதாவையும், அவரது மகன் பாஸ்கரையும் உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு ராதா தரப்பினரும் தாக்கினராம்.

    தாக்குதலில் பலத்த காயமடைந்த ராதா, பாஸ்கர் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராதா உயிரிழந்தார்.

    தாக்குதலில் காயமடைந்த பாலகிருஷ்ணனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நன்னிலம் போலீஸார் ராஜகுருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai