சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் முகாம்: ஆட்சியர் ஆய்வு

    By திருவாரூர்,  |   Published on : 27th April 2015 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்கள் இணைத்து வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் முகாமில் ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

    மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் ஆதார் விவரங்கள் இணைப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கூறியது:

    தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, வாக்குசாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து ஆதார் எண், செல்பேசி மற்றும் இ.மெயில் விவரங்களை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைத்து வருகின்றனர். இதுவரை ஆதார் எண், செல்பேசி எண் மற்றும் இ.மெயில் அளிக்காதவர்கள் வீடு வீடாக சென்று கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு, குடும்பத்தில் இறந்தவர்கள் பெயர் இடம் பெற்றிருத்தல், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் விவரங்களை சம்மந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்தி அளிக்கவும், மாவட்டத்தில் 100 சதவீதம் தூய்மையான வாக்களார் பட்டியலை தயார் செய்ய இச்சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது என்றார் மதிவாணன்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, வட்டாட்சியர் அம்பிகாபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai