Enable Javscript for better performance
மே 1-ல் சிறப்பு கிராமசபை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மே 1-ல் சிறப்பு கிராமசபை கூட்டம்

    By திருவாரூர்/நாகப்பட்டினம்,  |   Published on : 28th April 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர், நாகை மாவட்டங்களில் மே 1-ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளதாவது:

    மே 1-ம் தேதி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், நிகழாண்டு ஜனவரி முதல் மார்ச் முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவின அறிக்கை குறித்து விவாதித்தல், கோடை காலத்தில் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல், ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணாóவை ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்துதல் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், திட்டப் பணிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள், சுயஉதவிக் குழு உறுப்பினாóகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai