Enable Javscript for better performance
ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொது ரத்த தான முகாம் வட்டார சுகாதாரத் துறை அலுவலர் புஷ்பா தலைமையில் நடைபெற்றது.

    முகாமை ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே.பி.நடராஜன் தொடங்கி வைத்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அரவிந்த்குமார், அருண்சந்தர், சுகாதார துறை ஆய்வாளர்கள் பழனியப்பன், சீனிவாசன், ராஜேஷ், அரிமா சங்க முன்னாள் செயலாளர் மாரிமுத்து, மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி குழுவினர் மற்றும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai