Enable Javscript for better performance
வருவாய்த் துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய் ஆய்வாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூரில் திங்கள்கிழமை வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய் ஆய்வாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், சுருக்கெழுத்து, தட்டச்சர்களுக்கு வருவாய் உதவியாளர் பதவி உயர்வு பெற 5 ஆண்டு பணியாற்றியதற்கான கன்வர்சன் ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பைரவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai