சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

  திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம், கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி அஞ்சம்மாள் (80). கடந்த 24-ம் தேதி கள்ளிக்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கூட்டுறவு அங்காடிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது, திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அஞ்சம்மாள் தலையில் பலத்த காயமடைந்தார்.

  இதையடுத்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்து தொடர்பாக எடையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai