சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், டிராக்டரில் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    திருத்துறைப்பூண்டி காவல் சரகம், பிச்சன்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் மகள் கனிமொழி (30). இவரது கணவர் கார்த்திகேயன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அறிவழகன், விளக்குடி கிராமத்தில் இருந்து தனது மகள் கனிமொழி, அவரது மகன் ஸ்ரீவத்சன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    மடப்புரம் கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பிய போது, அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரில் சிக்கி கனிமொழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அறிவழகன், ஸ்ரீவத்சன் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai