சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசலில் வீட்டுப் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    குடவாசலைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி பூங்கொடி (35). இவர், கடந்த 26-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பிறகு ஊர்திரும்பிய அவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த வளையல், மோதிரம் என 9 பவுன் நகைகள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில், குடவாசல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai