சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஆலய தேரோட்டம்

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 30th April 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஆலய சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீசர் ஆலயம் அசுபதி நட்சத்திர பரிகார தலமாகும். இத்தலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார் பிறவி மருந்தீசர்.

    திருமண வரம் வேண்டும் பெண்கள் இங்குள்ள மாங்கல்ய தீர்த்தத்தில் நீராடி பெரியநாயகி அம்பாளை வழிபட்டால் திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆலய சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஏப். 16, 17-ல் விக்னேஸ்வர உற்சவமும், 18,19-ல் சுப்பிரமணியர் உற்சவமும், 20ஆம் தேதி அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தீர்த்த விடங்க தியாகராஜர் விநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் புடை சூழ திருத்தேரில் எழுந்தருளினார். தியாகராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று, பக்தர்கள் வடம் பிடிக்க தேர் மேலவீதி, வடக்குவீதி, தெற்கு வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிழச்சியில் சுற்றுப் பகுதி கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai