சுடச்சுட

  

  நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  By நாகப்பட்டினம்/ திருவாரூர்,  |   Published on : 30th April 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை, திருவாரூரில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  வாணிபக் கிடங்குகளில் இருந்து வரும் அத்தியாவசிய பொருள்களை விற்பனையாளர் நியாய விலைக்கடை முன் எடையிட்டு வழங்க வேண்டும். இருப்பு குறைவுக்கு பல மடங்கு பிடித்தம் செய்யும் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். சென்னை எண்ணூர் நியாய விலைக் கடையில் பணிபுரிந்த வி. இளங்கோவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். பாஸ்கர் தலைமை வகித்தார்.

  திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai