Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் சாராய பெண் வியாபாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    குண்டர் சட்டத்தில் சாராய பெண் வியாபாரி கைது

    By திருவாரூர்  |   Published on : 28th January 2015 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர், ஜன. 27: திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொக்கலாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி பிரேமா (46) சட்டவிரோதமாக புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்து வந்தார். காவல் துறையினர் பல்வேறு வழக்குகள் தொடுத்தும், எச்சரித்தும் பிரேமா சாராய விற்பனையை நிறுத்தவில்லையாம்.

    எனவே, பிரேமாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் பரிந்துரைத்தார். இதையடுத்து ஆட்சியர் எம். மதிவாணன் உத்தரவின் பேரில், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீஸார் சாராய வியாபாரி பிரேமாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai