Enable Javscript for better performance
மதுவிற்ற 22 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர், ஜன. 27: திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 22 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டூர் அருகே ராஜா மகன் கோபி (28), மகாதேவபட்டினம் ஜெயச்சந்திரன் (45) உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுவிற்ற 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 75 மதுபாட்டில்களும், 110 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai