Enable Javscript for better performance
ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு பிப்ரவரி 24-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு பிப்ரவரி 24-க்கு ஒத்திவைப்பு

    By நீடாமங்கலம்  |   Published on : 28th January 2015 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம், ஜன. 27: திருவாரூர் மாவட்டம், ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கை பிப்ரவரி மாதம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீடாமங்கலம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி. இவருக்குச் சொந்தமான வீடு கடந்த 2011-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    பொக்லைன் உரிமையாளர் வீரசிவசங்கர், ஓட்டுநர் சக்தி ஆகிய இருவர் மட்டுமே நேரில் ஆஜராகினர். சசிகலாவின் தம்பி மன்னார்குடி திவாகரன் உடல் நலம் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பெ. முருகன், விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai