Enable Javscript for better performance
வெடிகுண்டு மிரட்டல் வலங்கைமான் அரசு அலுவலகங்களில் தீவிர சோதனை- Dinamani

சுடச்சுட

    

    வெடிகுண்டு மிரட்டல் வலங்கைமான் அரசு அலுவலகங்களில் தீவிர சோதனை

    By நீடாமங்கலம்  |   Published on : 28th January 2015 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம், ஜன. 27: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் அஞ்சலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த அலுவலகங்களுக்கு வந்த மர்ம கடிதத்தையடுத்து, தஞ்சாவூர் வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை நடத்தினர்.

    வலங்கைமான் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வேளாண் துறை அலுவலகம், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை மர்ம கடிதம் வந்தது. இதையடுத்து புகாரின் பேரில், தஞ்சாவூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், இது புரளி என தெரியவந்தது. இங்குள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு ஏற்கெனவே

    வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai