Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில்...

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மன்னார்குடி அம்பேத்கர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்தனர்.

    மன்னார்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். காமராஜ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பூபதிமாரியப்பன், நகரச் செயலர் ஏ.டி. மாதவன், ஒன்றியச் செயலாளர்கள் கா. தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி மேற்கு), கோ. அரிகிருஷ்ணன் (நீடாமங்கலம் தெற்கு), எம்.எஸ். சங்கர்(வடக்கு), தொகுதி செயலர் எம்.கே. கலியபெருமாள், மாவட்ட பேரவை செயலர் பொன். வாசுகிராம், நகர்மன்ற துணைத் தலைவர் த. வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் டி. சந்திரா தலைமையிலும்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் வி.த. செல்வம் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதேபோல், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மாவட்டச் செயலர் காளிதாஸ் தலைமையிலும், மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றியச் செயலர் எஸ்.கே. குமார் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில்...

    திருத்துறைப்பூண்டி நகரில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ. பழனிச்சாமி தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன், மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் ஆர். ஞானமோகன், ஒன்றியச் செயலர் அ. பாஸ்கர், நகரச் செயலர் எம். முருகேசன் உள்ளிட்டோரும், மாவட்ட அதிமுக முன்னாள் துணைச் செயலர் வழக்குரைஞர் ஆர்.கே.பி. விஸ்வநாதன் தலைமையில், வேட்பாளர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, முத்துப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கே.பி. விஸ்வநாதன், தொகுதி தேர்தல் பணிக்குழுத் துணைத் தலைவர் டி. ஜெகன் உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலர் எஸ். சாமிநாதன் தலைமையிலும், வி.சி. அமைப்பின் சார்பில் மாவட்டச் செயலர் வி.த. செல்வம் தலைமையிலும், திமுக வேட்பாளர் பி. ஆடலரசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai