Enable Javscript for better performance
சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி உத்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி உத்ஸவ கொடியேற்றம்

    By நீடாமங்கலம்  |   Published on : 15th April 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

    தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜாவால் கி.பி. 1761 -இல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல்பெற்றது.

    ஆண்டுதோறும் இங்கு ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஸ்ரீராமநவமி உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து ஸ்ரீராமர் மூலவர் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. வரும் 24 ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai