Enable Javscript for better performance
மன்னார்குடி தொகுதி அதிமுக கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் தொகுதி கழகச் செயலர் எம்.கே. கலியபெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் வீ. ஜீவானந்தம் (கோட்டூர் தெற்கு), கோ. அரிகிருஷ்ணன் (நீடாமங்கம் தெற்கு), எம்.எஸ். சங்கர் (வடக்கு), இ. ஷாஜகான் (பேரூர்), கா. தமிழச்செல்வம் (மன்னார்குடி மேற்கு), பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ். கலைவாணன், தவமணி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழக உணவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் பேசினார்.

    கூட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதி உறுப்பினர் கு. பரசுராமன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சா. ஞானசுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலர் ஜம்ஜம்சாகுல், இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவர் க. லெனின், பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், விவசாய அணி மாவட்டச் செயலர் டி. கோவிந்தராஜ், நகர்மன்றத் தலைவர் டி. சுதா அன்புச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவர் த. உதயகுமாரி தமிழ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கட்சியின் நகரச் செயலர் ஏ.டி. மாதவன் வரவேற்றார். தொகுதி கழக இணைச் செயலர் எஸ்.டி. செந்தில் ராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai