Enable Javscript for better performance
ஈரோட்டுக்கு 2,000 டன் பொதுரக நெல் அனுப்பிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டுக்கு 2,000 டன் பொதுரக நெல் அனுப்பிவைப்பு

    By நீடாமங்கலம்  |   Published on : 01st March 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு 2,000 டன் பொதுரக நெல் மூட்டைகள் அரவைக்காக திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன்படி, 150 லாரிகளில் 2,000 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் 70 பேர் சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    இதைத் தொடர்ந்து, சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai