சுடச்சுட

  

  காசோலை மோசடி வழக்கு: ஒருவருக்கு 6 மாதம் சிறை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 01st March 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

  திருத்துறைப்பூண்டி பெரியசிங்காந்தியைச் சேர்ந்த சிதம்பரத்திடம், ஆட்டுர் சாலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ரூ. 25 ஆயிரத்தை கடனாகப் பெற்றாராம். அதற்கு ஈடாக வங்கி காசோலை அளித்திருந்தாராம். அந்த காசோலையை வங்கியில் சிதம்பரம் செலுத்தியபோது, போதிய தொகை இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

  இதுகுறித்த வழக்கு திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ. 1000 அபராதம், ரூ. 25 ஆயிரத்தை ஒருமாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai