சுடச்சுட

  

  குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மன்னார்குடி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

  By மன்னார்குடி  |   Published on : 01st March 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

  மன்னார்குடி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் டி. சுதா அன்புச்செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் த. வரலட்சுமி, ஆணையர் (பொ) ச. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பி. இளஞ்சேரன்: 4 ஆவது வார்டில் கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். (இதே கோரிக்கையை உறுப்பினர்கள் கே. தெய்வேந்திரன், எம். விஜயலட்சுமி, கே. ஜீவானந்தம் ஆகியோர் வலியுறுத்தினர்.)

  தலைவர்: சம்பந்தப்பட்ட பிரிவு மேற்பார்வையாளர் மெத்தனப்போக்குடன் நடந்துகொள்வதுதான் இதற்குக் காரணம்.

  டி. ஜெகநாதன்: புதிய நகர்மன்றக் கூட்ட அரங்குக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?

  தலைவர்: பேருந்து நிலைய மாற்றம் குறித்து முறையாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. தேரடியில் உள்ள பொதுமேடை வளாகத்தில் உள்ள கழிவறையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிடவும், தேவையான எண்ணிக்கையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

  கூட்ட அரங்கத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்கக் கோரும் தீர்மானம் சென்னை தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  கண். மணிவண்ணன்: 7 ஆவது வார்டில் கூடுதலாக மேலும் இரண்டு குப்பை கொட்டும் பெட்டிகள் வைக்க வேண்டும்.

  டி. காஞ்சனா: 11 ஆவது வார்டில் கழிவுநீரோடை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீண்ட நாள்கள் கடந்தும் பணிகள் நடைபெறவில்லை.

  எல். அண்ணாதுரை: பந்தலடி, ரயில் நிலையம் செல்லும் காந்திஜீ சாலை பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  தலைவர்: கும்பகோணம் மகாமகம் பணிக்கு நகராட்சி ஊழியர்கள் சென்றிருப்பதால், இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தெருக்களில் கால்நடைகளை விடுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  கே. ஜீவானந்தம்: காத்தாயி அம்மன் கோயில் தெருவில் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது.

  ஆர். மல்லிகா, எம். விஜயலட்சுமி: 22, 31 ஆவது வார்டில் உயர்கோபுர விளக்குகளில் பல்புகள் எரியவில்லை. (மேலும் சில உறுப்பினர்கள் தெருக்களில் மின்விளக்குகள் எரியவில்லை எனப் புகார் கூறினர்.)

  தலைவர்: பலமுறை அறிவுறுத்தியும் நகராட்சி மின் பணியாளர்கள் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதால் பிரச்னை குறித்து விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்புவதுடன், துறைவாரியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

  ஜெ. ராஜாத்தி: 2 ஆவது வார்டில் சாலை மற்றும் கழிவுநீரோடை வசதிகள் செய்யப்படவில்லை.

  ஜி. பிரபாகரன்: ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என இரண்டிலும் வசிப்பிட முகவரி ஒன்றாக இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என வாக்காளர் சரிபார்க்கும் பணியின்போது, அலுவலர்கள் தெரிவித்தனர்.

  தலைவர்: நகராட்சிக்குள்பட்ட எந்தப் பகுதியில் குடியிருந்தாலும் வாக்காளர் பட்டியல் உள்ள பகுதி வாக்கு மையத்தில் வாக்களிக்கலாம்.

  ஆர். சிங்காரவேலன்: நகரின் விரிவாக்கப் பகுதிகளில் தினமும் தெருக்களைக் கூட்டி குப்பைகள் அள்ளப்படுவதில்லை.

  இ. சாவித்திரி: கொசு ஒழிப்பு மருந்து தினசரி அடிக்கப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும்.

  வி. கண்ணதாசன்: தாமரைக்குளம் கீழ்க்கரையில் கட்டப்பட்டு  வரும் ஒருங்கிணைந்த மீன் அங்காடி கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

  தலைவர்: தினசரி கொசு ஒழிப்பு மருந்து அடிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். மீன் அங்காடி கட்டும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai