சுடச்சுட

    

    தலைமைக் காவலரிடம் தகராறு செய்தவர் கைது

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 01st March 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தலைமைக் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலைய பகுதியில் களப்பால் காவல் நிலைய தலைமைக் காவலர் சண்முகநாதன், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, ஆலங்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் சிலருடன் சாலையின் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். இதை தலைமைக் காவலர் சண்முகநாதன் கண்டித்தார். அதற்கு சுப்பிரமணியன் சண்முகநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai