சுடச்சுட

  

  தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காயை அரசே கொள்முதல் செய்து உரிய விலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, திருவாரூரில் திங்கள்கிழமை தேங்காய் உடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

  திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 120, உரி தேங்காய் கிலோ ரூ. 40 என விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த  வேண்டும், இறக்குமதி வரியை கூடுதலாக்க வேண்டும், தேங்காய் எண்ணெய் கலப்படத்துக்கு பயன்படுத்தப்படும்  பார்ம் கர்னல் ஆயில் இறக்குமதியையும், கலப்படம் செய்வதையும் தடுக்க வேண்டும்.

  நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வழங்க வேண்டும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை அனைத்து தென்னை பயிரிடும் மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும், தென்னையில் இருந்து நீரா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கி வெல்லம், ஜீனிக்குப் பதிலாக பயன்படுத்த வேண்டும், தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன், தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலர் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai