சுடச்சுட

    

    நதிகளை தேசியமயமாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

    By திருவாரூர்  |   Published on : 01st March 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நதிகளை தேசியமயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மகேசன் சக்தி இயக்கம் சார்பில், இயக்கத் தலைவர் தென்னரசு தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள், விவசாயத்தை பாதுகாக்க நதிகளை தேசியமயமாக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்.

    தமிழகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதித்து வருவதால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். திருவாரூர் அருகே மணக்காலில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது.

    இக்கோயில் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி பெருமாள் கோயில் பாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    உண்ணாவிரதத்தில் பாரதிய கிசான் சங்க அமைப்பாளர் ராமையா, மகேசன் சக்தி இயக்க மாவட்டச் செயலர் இளங்கோ, மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம்,  மாவட்ட இணைச் செயலர் கருணாநிதி மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை புலவர் சண்முகவடிவேல் முடித்து வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai