சுடச்சுட

    

    வினாடி - வினா போட்டியில் சிறப்பிடம் பெற்றோர் விவரம்

    By மன்னார்குடி  |   Published on : 01st March 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஜேசிஐ மன்னை அமைப்பும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழ் வழியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டியை மன்னார்குடி எஸ்.பி.ஏ மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை நடத்தின.

    மன்னார்குடி வட்டார அளவிலான அரசு, அரசு உதவிப் பெறும் 18 பள்ளிகளைச் சேர்ந்த  மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

    6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகவும், 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகவும்  போட்டிகள் நடத்தப்பட்டன. 6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒருவர் வீதம் ஒரு குழுவாகவும், 9 ஆம் வகுப்புக்கு 2 பேரும், 11 ஆம் வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேர் கொண்ட ஒரு குழுவாகவும் போட்டியில் பங்கேற்றனர்.

    தமிழ்வழிப் பாடத்தில் அவரவர் வகுப்புக்குரிய அறிவியல் பாடப் பகுதியிலிருந்தும், பொது அறிவு  தொடர்புடையதாகவும் வினாக்கள்  கேட்கப்பட்டன. 6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வாகவும், 9, 11 ஆம் வகுப்புக்கு வாய்வழித் தேர்வாகவும் நடைபெற்றது. இதில் 6, 7, 8 ஆம் வகுப்பு பிரிவில் மரக்கடை ஊராட்சி நடுநிலைப் பள்ளி யு. யோகேஸ்வரி, எஸ். ராசிதா, எஸ். அபிராமி ஆகியோர் முதலிடத்தையும்,  நெடுவாக்கோட்டை ஊராட்சி நடுநிலைப் பள்ளி எ. அஜித், ஜெ. சுவிதா, கே. பபித்தா ஆகியோரும் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். ஊரத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி சி. தீபக், எஸ். ரஞ்சித்குமார், எஸ். அபிஷேக், வடபாதி ஊராட்சி நடுநிலைப் பள்ளி கே. ஆகாஷ், கே. சேகரன், கே. ஹரீஷ், மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஜெ. தேவி, வி. செல்லா, எ. அகிலா ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

    9, 11 ஆம் வகுப்பு பிரிவில் மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஜிவானி, அட்சயா, கோ. கோகுலப்ரியாவும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி எஸ். மோனிகா, எ. கனகஜீவிதா, எம். காவியாவும், மன்னார்குடி கூட்டுறவு நகராட்சி அர்பன் வங்கி மேல்நிலைப் பள்ளி ஜி. கோகிலா, ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர்.

    போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ. 900, ரூ. 600, ரூ. 300 என ஊக்கத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு ஜேசிஐ மன்னை தலைவர்  எஸ். கமலப்பன் தலைமை வகித்தார். மன்னார்குடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தை. புகழேந்தி  போட்டியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜேசிஐ முன்னாள் தலைவர் எஸ். ராஜகோபாலன் கலந்துகொண்டார்.

    சிறப்பிடம் பெற்றவர்களைப் பாராட்டி அறிவியில் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் எம். செல்வநாதன், இணைச் செயலர் யூ.எஸ். பொன்முடி, கிளைத் தலைவர் பி. ரமேஷ், ஜேசிஐ மண்டல தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன், முன்னாள்  தலைவர் எஸ். அன்பரசு ஆகியோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai