சுடச்சுட

  

  விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடுத் திட்ட அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது

  By திருவாரூர்  |   Published on : 01st March 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடுத் திட்ட அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என விவசாயிகள் கூறினர்.

  மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த பொது நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடுத் திட்டத்துக்கு ரூ. 5,500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்கும் காப்பீடுத் திட்டம் நீக்கப்பட்டு ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்ற உறுதியான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

  இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலர் வெ. சத்யநாராயணன் கூறியது: மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் பயிர்க்  காப்பீட்டுக்கு ரூ. 5,500 கோடி நிதி ஒதுக்கீடு என்பது அதிக நிதி ஒதுக்கீடு செய்வதுபோன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளன.

  விவசாயிகளுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் காப்பீடுத் திட்டம் உரிய பயன்கள் கிடைப்பதில்லை.

  நிகழாண்டு காவிரி டெல்டாவில் அதிக மழை காரணமாக பாதி அளவு மகசூல் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால், காப்பீடு குறித்து எந்தவொரு அறிவிப்போ அல்லது கணகெடுப்போ நடைபெறவில்லை. மேலும், இந்தியா முழுவதும் பயிர்க் காப்பீட்டுக்கு ரூ. 5,500 கோடி போதுமானதாக இருக்காது. பயிர்க் காப்பீட்டை தனியாரிடம் இருப்பதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai