சுடச்சுட

    

    ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு முதல்வர் பரிசளிப்பு

    By திருவாரூர்  |   Published on : 02nd March 2016 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய அளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த திருவாரூர் ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு சென்னையில் அண்மையில்  நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றுபவர் ஆனந்தன். இவர் கடந்த 2014-இல் ஆண்டு ஹரியணா மாநிலம், காதர்பூரில் நடைபெற்ற அகில இந்திய காவலர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்று 2 ஆம் பரிசு பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    இதேபோல், மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர் சந்தியா கடந்த 2014-இல் தில்லியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற அகில இந்திய ஜுடோ போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்று 3 ஆம் இடம் பெற்று வெண்கலம் பரிசாகப் பெற்றார்.

    பரிசு பெற்ற இரு காவலர்களும் அகில இந்திய அளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்ததுக்காக பிப். 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில், காவலர் ஆனந்தனுக்கு ரூ. 4 லட்சம் காசோலை, சந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் காசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற காவலர்கள் இருவரையும் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் பாராட்டினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai