என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு கணினி பயிற்சி முகாம்
By மன்னார்குடி | Published on : 02nd March 2016 06:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கணினி பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழிகள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேசியப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா முன்னிலை வகித்தார்.
கணினி மைய இயக்குநர் வி. வெங்கடேஷ், கணினியின் அடிப்படைத் தகவல்கள், கணினி துறையிலுள்ள வேலைவாய்ப்புகள், வளாக நேர்காணல், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்புத் திறன்கள், தன் விவரக் குறிப்பு தயார் செய்தல், இணையம் செயல்படும் முறை போன்றவை குறித்து விளக்கம் அளித்தார்.
மாணவர் ராஜகோபால் வரவேற்றார். அர்ஜுன்குமார் நன்றி கூறினார்.