சுடச்சுட

    

    "கற்கோவிலில் மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஓஎன்ஜிசி பணியை தொடங்கக் கூடாது'

    By மன்னார்குடி  |   Published on : 02nd March 2016 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள கற்கோவில் கிராமத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அப்பகுதி மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கக் கூடாது என்று மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர். ராஜா கூறினார்.

    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    கற்கோவில் கிராமத்தில் கடந்த சில நாள்களாக ஓஎன்ஜிசி நிறுவனத்தால் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக கொண்டு வந்து இறக்கியிருக்கும் பொருள்களை பார்க்கும்போது, பூமிக்கடியிலிருந்து மீத்தேன் எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே ஆழ்துளை கிணறு தோண்டுவதால், மிக அதிக சப்தம் வெளி வருவதால் இரவு நேரங்களில் தூங்கக் கூட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கிணறு தோண்டும்போது அதிலிருந்து வெளிவரும்  ரசாயனம் கலந்த வாயுக்கள் காற்றில் கலந்து அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற அவதியால்  பாதிக்கப்பட்ட கற்கோவில் கிராமத்தினர் கடந்த பிப். 27 ஆம் தேதி ஓஎன்ஜிசி பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ஓஎன்ஜிசி பணியை நிறுத்த உறுதியளித்த நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், அன்று மாலையே மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறு தோண்டும் பணியை தொடங்கிவிட்டது.

    கற்கோவில் கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல், அவர்களின் அச்சத்தைப் போக்காமல் கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai