சுடச்சுட

  

  கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 02nd March 2016 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

  வரும் 7 ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் நடைபெறுவதையொட்டி, கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீநாகநாத சுவாமி கோயில்களில் பூச்சொரிதல் நிகழ்ச்சி தொடங்கியது.

  இதைத்தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு சார்த்தி பூச்சொரிதலுடன் மகாசிவராத்திரி உற்சவம் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மார்ச் 7 ஆம் தேதி சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. அன்று காவடி எடுத்தல், பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கரகம், தீச்சட்டி எடுத்தல், ஸ்ரீநாகநாத சுவாமிக்கு திங்கள்கிழமை இரவு 4 கால சிறப்பு வழிபாடுகளும், 4 காலம் 1008 சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.

  இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அ. ரவி, அறங்காவலர்கள் என்.ஏ.ஜி. சண்முகவடிவேல், கே.வி. ராஜேந்திரன், திருப்பணிக்குழுச் செயலர் ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம வாசிகள் செய்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai