சுடச்சுட

    

    சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 02nd March 2016 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நருவுளி களப்பாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நருவுளி களப்பாள் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 72 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை 68 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். இவர்களில் சுபா, தீபிகா, புவனேஸ்வரி உள்ளிட்ட 4 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மற்ற 64 மாணவ, மாணவிகளையும் சத்துணவு அமைப்பாளர் ராஜேஸ்வரி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். தலைமை மருத்துவர் வெற்றிச்செல்வி தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai