சுடச்சுட

  

  முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, நீடாமங்கலம் ஒன்றியம், சோணாப்பேட்டை கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் எம்.எஸ். சங்கர் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலர் கோ. அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் ஆர். சுவாமிநாதன், ஒன்றிய ஜெ. பேரவை செயலர் சோம. ஜெயபால், ஒன்றிய மாணவரணி செயலர் ஆதி. ஜனகர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஜி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆர். அன்பழகன் பேசினார்.

  மாவட்ட துணைச் செயலர் இளவரசி, நீடாமங்கலம் நகரச் செயலர் இ. ஷாஜஹான், பேரூராட்சி துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், தொகுதி கழக இணைச் செயலர் எஸ்.டி. செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சு. சமயமூர்த்தி, ஆர். அன்பழகன் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சிக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  புவனகிரி அழகுசெந்தாமரையின் வெற்றி நமதே கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சிக் கழகச் செயலர் ஆர். சின்னப்பா வரவேற்றார். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வி. பாலாஜி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai