சுடச்சுட

  

  மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் பழுதடைந்த சாலையை செப்பனிடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதை முழுமைப்படுத்திட வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பரவாக்கோட்டையில் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரதான சாலை காவல் நிலையத்திலிருந்து அய்யனார் கோயில் வரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து, சாலை மேம்படுத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

  பிரதான சாலையின் பணி முழுமை பெறாததால் சாலை முழுவதும் கலவை ஜல்லி கொட்டப்பட்டிருப்பதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்வதாகவும் கூறி பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாலை, பொதுமக்கள் கிராம கமிட்டித் தலைவர் ரமேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் ஜெயராமன், காவல்துறை ஆய்வாளர் மு. கழனியப்பன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai