சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

    By திருவாரூர்  |   Published on : 02nd March 2016 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 30,000 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 246 பேர் மனு அளித்தனர்.

    கூட்டத்தில், மீன்வளத்துறை சார்பில் தமிழக அரசின் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின்கீழ் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ. 2,500 வீதம் ரூ. 10,000 மதிப்பில் உயிர்க்காப்பு மிதவைகள், 4 பேருக்கு காதுக்குபின் அணியும் காதொலி கருவி ரூ. 20,000, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்ற தேர்வான 4 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) விஜயலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சிறப்புத்  திட்டங்கள்) ராமசுந்தரம், மீன்வள உதவி இயக்குநர் உமாசுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai