சுடச்சுட

  

  திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் 64 ஆவது பிறந்த நாள் விழா, திருவாரூரில் திமுகவினரால் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

  திருவாரூர் ஒன்றியம், புலிவலம் மற்றும் நகர கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளாக பெண்களுக்கு சேலை, எவர்சில்வர் குடம், மரக்கன்றுகள் ஆகிவற்றை மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன் வழங்கினார்.

  பின்னர், சட்டப்பேரவை அலுவலகம் அருகே கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

  இதையடுத்து, திருவாரூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டன.

  ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புலிவலத்தில் ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை முழுவதும் இலவச உணவு வழங்கப்பட்டது.

  மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலர் கு.தெ. முத்து, நகரச் செயலர் பிரகாஷ், நகராட்சி துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர். ரஜினிசின்னா, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு அமைப்பாளர் தாஜுதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai