சுடச்சுட

  

  வடுவூர் ஊராட்சியில் கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு

  By மன்னார்குடி  |   Published on : 02nd March 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஊராட்சியில் தஞ்சை மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  விழாவில் உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, புதிய கிளையை திறந்துவைத்துப் பேசியது:

  தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்.

  சட்டப்பேரவையில் 110 -விதியின்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி, வடுவூர் ஊராட்சியில் தஞ்சை மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது என்றார்.

  விழாவில் 15 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 40.25 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஒருவருக்கு உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai