சுடச்சுட

    

    வலங்கைமானில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

    By திருவாரூர்  |   Published on : 02nd March 2016 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்ட புதிய  பேருந்து வழித்தடத்தை தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

    வலங்கைமானில் கும்பகோணத்திலிருந்து பாடகச்சேரி வழியாக வெட்டாற்று பாலம் வரை,  கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வெட்டாற்று பாலம், கீழவாய்க்கால், புளியக்குடி வழியாக அமிர்தவல்லிவரை, தஞ்சாவூரிலிருந்து அம்மாபேட்டை வழியாக விளத்தூர் வரை 4 முறை செல்லும் பேருந்து புதிய வழித்தடப் போக்குவரத்தை அமைச்சர் காமராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    அரசுப் போக்குவரத்துக்கழக குடந்தை மண்டல துணை மேலாளர் (வணிகம்) இளங்கோவன், நாகை மண்டல  மேலாளர் ராஜா மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai