சுடச்சுட

  

  திருவாரூரில் இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் இலக்கிய, இலக்கண 72 ஆவது தொடர் கருத்தரங்கம் நடைபெற்றது.

  கருத்தரங்கில் மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி, சொல் பயிற்சி, தமிழிசைப் பாடல் பயிற்சி, கணினி தமிழ்ப் பயிற்சி, இலக்கணப் பயிற்சி, உலகத் தாய் மொழிநாள் - மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் பிறந்த நாள் பிப். 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

  மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை கஸ்தூரிபாகாந்தி கல்வி நிறுவனத் தாளாளர் சந்திராமுருகப்பன் தொடங்கி வைத்தார்.

  மெரிட் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குநர் சிவ. அருள் பரிசுகள் வழங்கினார். கருத்தரங்கில், அலிவலம் ஊராட்சித் தலைவர் வெ. தங்கையன், திருவாரூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் தெ. சக்திசெல்வகணபதி, ஆசிரியர்கள் எண்கண் மணி, ந. தமிழ்க்காவலன், சோ. சம்புநாதன் மற்றும் தமிழார்வலர்கள் அ. மோகன்தாசு, செல்வதுரை, இரா. அன்பழகன், சா. அறிவழகன், செ. ஜெயந்தி, இரா. தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai