சுடச்சுட

  

  கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றவர் கைது

  By திருவாரூர்  |   Published on : 03rd March 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

  கூத்தாநல்லூர் அருகேயுள்ள வடகோவனூரைச் சேர்ந்த மோசஸ் மகள் ரோஸ்லின் (19). இவர், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு, வடகோனூர் கல்லறை அருகே பேருந்தை விட்டு இறங்கி நடந்து சென்றாராம்.

  அப்போது, மேலபனங்காட்டாங்குடியைச் சேர்ந்த லெனின் (25), தர்மராஜன் (27), பெரியகுருவாடி பார்த்தீபன் ஆகியோர் ரோஸ்லினை மறித்து காரில் கடத்த முயன்றார்களாம். உடனடியாக ரோஸ்லின் தனது மாமா அல்போன்ஸ்ராஜ்வுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளித்தாராம். இதையடுத்து, அங்கு வந்த அல்போன்ஸ்ராஜ், தர்மராஜனை பிடித்து கூத்தாநல்லூர் போலீஸில் ஒப்படைத்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai