சுடச்சுட

    

    சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு செல்லிடப்பேசி

    By திருவாரூர்  |   Published on : 03rd March 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு செல்லிடப்பேசியை ஆட்சியர் எம். மதிவாணன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு செல்லிடப்பேசி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: "அம்மா' திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 426 சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், புதுவாழ்வுத் திட்டத்தின் 348 சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் என மொத்தம் 774 பயிற்றுநர்களுக்கு ரூ. 29 லட்சத்து 79 ஆயிரத்து 900 மதிப்பிலான செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    இதில் புதுவாழ்வுத் திட்ட கூடுதல் திட்ட இயக்குநர் சினேகலதா, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai