சுடச்சுட

    

    திருவாரூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நெல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் அரசு கொள்முதல் செய்யும் நெல் ரயில் மூலமாக அரவைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் ரயில் பாதைகள் இல்லாத இடங்களில் லாரிகள் மூலம் ரயில் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

    திருவாரூரிலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு லாரி மூலம் அரிசி அனுப்பிவைக்கப்படுகிறது. அரிசியை இறக்கிய பிறகு, அப்பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை ஏற்றிச் செல்ல அப்பகுதி லாரி சங்கங்கள் அனுமதிப்பதில்லை.

    மாவட்டத்தில் எந்தப் பகுதிகளில் உள்ள லாரிகள் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் நெல் ஏற்றலாம் என அரசாணை இருந்தும் இதுபோன்ற நிர்வாக சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், புதன்கிழமை திருவாரூர் ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த நெல்லை இறக்க லாரி சங்கங்கள் அனுமதிக்கவில்லை. இதனால் நெல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்ததால், தங்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    லாரி சங்க நிர்வாகிகள் சுமுக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, நெல் மூட்டை இறக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. பிறகு அரவைக்கு நெல் அனுப்பும் பணி தொடங்கியது.

    மேலும், ரயில்வே குட்ஷெட்டில் 200-க்கும் மேற்பட்ட நெல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு திருவாரூர் பகுதிகளில் இருந்து வரும் நெல் போதுமானதாக இல்லை. எனவே, நாள்தோறும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இருந்து வரும் நெல்லையும் தடையின்றி ரயிலில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என நெல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai