சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி மதுவிற்ற 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மாவட்டத்தில் சாராயம் மற்றும் வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையில் தனிப்படை அமைத்து, சாராயச் சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயச் சோதனை நடத்தினர். அப்போது, கொக்கலாடியில் பிரேம் (55), திருத்துறைப்பூண்டி வாணக்காரத் தெரு அன்பழகன் (59), ஆலிவலம் முருகவேல் (39) உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 300 வெளி மாநி மதுப்புட்டிகள் மற்றும் 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai