Enable Javscript for better performance
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி: ஒருவர் கைது

    By திருவாரூர்,  |   Published on : 03rd March 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்து ஏமாற்றியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஓவரூரைச் சேர்ந்தவர் கார்த்தி (28). இவரிடம் கடந்த 25.7.2014 அன்று திருத்துறைப்பூண்டி மடப்புரத்தைச் சேர்ந்த முருகானந்தம் (41), வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்தாராம்.

    இதுகுறித்து கார்த்தி, திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பலுலா தலைமையில், ஆய்வாளர் ஆர். சந்திரசேகர், சார்பு ஆய்வாளர்கள் வரதராஜன், சந்திரசேகரன், காவலர்கள் ராஜேந்திரன், வெங்கட்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, தனிப்படை போலீஸார் திருத்துறைப்பூண்டியில் முருகானந்தத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்டம், சித்தாய்மூரைச் சேர்ந்த செந்தில்நாதன், மதுரை நாசா டிராவல்ஸ் உரிமையாளர் சையது சுல்தான், சிவகங்கை மாவட்டம், வடவன்பட்டி சேவகன் (எ) செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இதேபோல், முருகானந்தம் பல்வேறு நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai